-
Notifications
You must be signed in to change notification settings - Fork 1
/
Copy pathpyramids.txt
15 lines (8 loc) · 5.37 KB
/
pyramids.txt
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
பிரமிடு (pyramid, கிரேக்க மொழி: πυραμίς pyramis[1]) என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக் கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அமைப்புக்கள் பிரமிடுகளாகவே இருந்தன. முதலில் எகிப்தில் டாசுர் நக்குரோபோலிசில் உள்ள சிவப்புப் பிரமிட்டும், பின்னர் கூபுவின் பெரிய பிரமிடும் மிகப்பெரிய அமைப்புக்களாக இருந்தன. பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய பிரமிடு மட்டுமே. இது பெரும்பாலும் சுண்ணக்கல்லால் கட்டப்பட்டுள்ளது; சில உள்ளறைகள் சிவப்பு கிரானைட்டு கற்களால் ஆனவை. கட்டிடவியல் அதிசயம் எனப்படும் பெரி பிரமிடில் 2.5 tonnes (5,500 lb) இலிருந்து 15 tonnes (33,000 lb) வரை எடையுள்ள 1,300,000 கற்கள் கொண்டு 13 ஏக்கரா நிலப்பரபில் கட்டப்பட்டுள்ளது. இதன் அடி சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 230 மீ (755 அடி) நீளமுடையதாக உள்ளது.இதன் உயரம் கட்டப்பட்டபோது 146.5 மீ (488 அடி)யாக இருந்தது. ஆனால் உச்சியில் இருந்த வெண்ணிற துரா சுண்ணக்கற்கள் திருடப்பட்டு கெய்ரோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டதால் இன்று இதன் உயரம் 137 மீ (455 அடி)யாக உள்ளது. இருப்பினும் இதுவே மிக உயரமான பிரமிடாக விளங்குகிறது.
உலகில் கட்டப்பட்ட பிரமிடுக்களில், கனவளவு அடிப்படையில் மிகப் பெரியது மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிடு ஆகும். இப் பிரமிடு இன்னும் அகழப்பட்டு வருகின்றது.
பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழம் நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன.
பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகம் முன்பாகக் கண்ணாடியாலான பிரமிடு அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநில லாஸ் வேகஸ் நகரில் லக்சர் ஓட்டல் எகிப்திய பிரமிடின் வடிவமைப்பில் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது.
A __pyramid__ is a structure, usually of stone, built in the shape of a pyramid. From ancient to modern times people in many different parts of the world have built such structures.
The word __"pyramid"__ comes from the Greek word pyramis which meant "wheat cake." The ancient Egyptian word for them was something like "Mer". The Great Pyramid of Giza was one of the Seven Wonders of the ancient world.
The first __pyramids__ were built in 2630 B.C. The oldest known pyramid in saqqara for the third Dynastys king Djose